/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காட்டு கூட்டு சாலை பகுதியில் கனரக வாகனம் செல்வது கண்காணிப்பு
/
காட்டு கூட்டு சாலை பகுதியில் கனரக வாகனம் செல்வது கண்காணிப்பு
காட்டு கூட்டு சாலை பகுதியில் கனரக வாகனம் செல்வது கண்காணிப்பு
காட்டு கூட்டு சாலை பகுதியில் கனரக வாகனம் செல்வது கண்காணிப்பு
ADDED : மார் 12, 2024 04:38 AM

கடம்பத்துார்,: திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் அரசு, தனியார், தொழிற்சாலை, பள்ளி, கல்லுாரி பேருந்து, கனரக வாகனம், என தினமும் 10,000த்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
தற்போது ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும் இந்த நெடுஞ்சாலையில் கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட தொடுகாடு, பராசங்குபுரம் போன்ற கிராமங்களும் உள்ளன.
இதையடுத்து கனரக வாகனங்கள் வருவதற்கு தடை என திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார், தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் உள்ள காட்டு கூட்டு சாலை பகுதியில் ஸ்ரீபெரும்புதுார் போலீசார் எச்சரிக்கை பதாகை வைத்துள்ளனர்.
இந்த எச்சரிக்கை பதாகையில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்ற எச்சரிக்கையோடு பெயரளவிற்கு சாலையோரம் மரங்களுக்கு நடுவே வைத்துள்ளனர். ஆனால், கனரக வாகனங்கள் இவ்வழியாக இயங்கியது.
இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து ஸ்ரீபெரும்புதுார் காவல் துறையினர் காட்டு கூட்டு சாலை சந்திப்பு பகுதியில் போலீசார் ஒருவரை நியமித்து கனரக வாகனங்களை அனுமதிக்காமல் மாற்றுப்பாதையில் திருப்பி விடுகின்றனர்.

