/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடி ஏரிகளின் உபரி ஓடையில் பராமரிப்பு பணிகள் மும்முரம்
/
கும்மிடி ஏரிகளின் உபரி ஓடையில் பராமரிப்பு பணிகள் மும்முரம்
கும்மிடி ஏரிகளின் உபரி ஓடையில் பராமரிப்பு பணிகள் மும்முரம்
கும்மிடி ஏரிகளின் உபரி ஓடையில் பராமரிப்பு பணிகள் மும்முரம்
ADDED : அக் 11, 2024 02:13 AM

கும்மிடிப்பூண்டி,:கும்மிடிப்பூண்டி ஈசா பெரிய ஏரி, பாலகிருஷ்ணாபுரம் ஏரி ஆகியவற்றின் உபரி நீர் கால்வாய், கும்மிடிப்பூண்டி துணை மின் நிலையம், தபால் தெரு, பாரதிதாசன் சாலை, மேட்டு தெரு வழியாக சோழியம்பாக்கம் ஏரியை சென்றடைகிறது. அந்த கால்வாய், 40 அடி அகலம் கொண்டதாகும். பொது பணித்துறையின் நீர்வளத்துறை பராமரிப்பில் அந்த கால்வாய் உள்ளது.
அந்த கால்வாயை நீர்வளத்துறையினர் முறையாக பராமரிக்க தவறுவதால் ஒவ்வொரு தொடர் மழைக்காலங்களிலும், மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கால்வாயை ஒட்டியுள்ள மேற்கண்ட பகுதிகள் முழுதும் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்குவதாக பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.
மழைக்காலங்களில் தடையின்றி கால்வாயில் உபரி நீர் செல்லும் வகையில், கால்வாயை மூழ்கடித்துள்ள மரங்கள், செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ., கோவிந்தராஜன் தெரிவித்ததன் பேரில், பேரூராட்சி நிர்வாகத்தினர், அந்த கால்வாயில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். பொக்லைன் இயந்திரம் கொண்டு கால்வாயை ஆழம் எடுத்து கரைகளை பலப்படுத்தி, மரம், செடி, கொடிகளை அகற்றி அகலப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

