/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கல்வி உதவித்தொகை பெற மாற்றுத்திறனாளிக்கு அழைப்பு
/
கல்வி உதவித்தொகை பெற மாற்றுத்திறனாளிக்கு அழைப்பு
ADDED : ஜூலை 22, 2025 09:24 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் வாயிலாக, நடப்பு நிதியாண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க, மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவ சான்று, பள்ளியில் பயின்று வருவதற்கான சான்று, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை ஆகியவற்றுடன், இ - -சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், https://www.thesevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

