/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடற்கரை உயிர்பலிகளை தடுக்க கிராம சபையில் வலியுறுத்தல்
/
கடற்கரை உயிர்பலிகளை தடுக்க கிராம சபையில் வலியுறுத்தல்
கடற்கரை உயிர்பலிகளை தடுக்க கிராம சபையில் வலியுறுத்தல்
கடற்கரை உயிர்பலிகளை தடுக்க கிராம சபையில் வலியுறுத்தல்
ADDED : பிப் 05, 2024 04:08 AM
திருவொற்றியூர் : திருவொற்றியூர் மண்டலம் 5வது வார்டு, கே.வி.கே. குப்பம், படவேட்டம்மன் கோவில் வளாகத்தில், கிராம சபை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
இதில், திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.சங்கர் 5வது வார்டு கவுன்சிலர் சொக்கலிங்கம், தி.மு.க., அயலக அணி மாவட்ட செயலர் எஸ்.டி.சங்கர் மற்றும் பல்துறை அதிகாரிகள், ஊர் நிர்வாகிகள் பிரதிநிதிகள் பங்கேற்று, தங்களது தேவைகள் குறித்து விவாதித்தனர்.
இதில் கவுன்சிலர்கள் கூறியதாவது:
பலகை தொட்டி குப்பம் அருகே, விபத்துகளை குறைக்கும் வகையில் சிக்னல் அமைக்க வேண்டும். 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். அணுகு சாலையில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.
மீன், பழம், காய்கறி மார்க்கெட் சாலையில் செயல்படுகிறது. அதற்கு, மாற்று வளாகம், கழிப்பறை, குடிநீர் வசதியுடன் ஏற்படுத்த வேண்டும். 5வது வார்டில் 3 கி.மீ., துாரத்திற்கு கடற்கரை உள்ளது.
விடுமுறை தினங்களில், குளியல் போட வரும் மக்கள், ஆழம் தெரியாமல், கடலில் மூழ்கி இறப்பது வாடிக்கையாகி விட்டது. போலீசார், பைபர் எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும்.
விம்கோ நகரில், தலைசிறந்த கால்பந்து விளையாட்டு வீரர்களை உருவாக்கிய மைதானம் இருந்தது.
மெட்ரோ வருகைக்குபின் தற்போது இல்லை. அதை மீட்டுத்தர வேண்டும். மாற்றாக, ஆல் இந்தியா ரேடியோநகரில் உள்ள 60 ஏக்கர் பரப்பிலான இடத்தை பயன்படுத்தி, மைதானம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

