/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் கொட்டி தீர்த்த மழை சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்
/
திருத்தணியில் கொட்டி தீர்த்த மழை சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்
திருத்தணியில் கொட்டி தீர்த்த மழை சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்
திருத்தணியில் கொட்டி தீர்த்த மழை சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்
ADDED : அக் 27, 2025 01:08 AM

திருத்தணி:  திருத்தணி நகரில், இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்ததால், பெரும்பாலான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால், சில நாட்களாக திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளம் நிரம்பியும், கொசஸ்தலை, நந்தியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தும் ஓடுகிறது.
நேற்று மதியம், 1:30 மணி முதல் திருத்தணி நகரத்தில் இரண்டரை மணி நேரம் காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், பெரும்பாலான சாலை மற்றும் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
குறிப்பாக, ம.பொ.சி.சாலை, அரக்கோணம் சாலை, கச்சேரி தெரு மற்றும் கீழ்பஜார் உட்பட பல இடங்களில் சாலை மற்றும் தெருக்களில் மழைநீர் தேங்கின. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் சிரமத்துடன் சென்றனர்.
சில இடங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சென்றது. நாளை இரவு 'மோந்தா' புயல் ஆந்திர மாநிலத்தில் கரையை கடக்க உள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

