/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையை சீரமைக்க வலியுறுத்தி அரசு பேருந்து சிறைப்பிடிப்பு
/
சாலையை சீரமைக்க வலியுறுத்தி அரசு பேருந்து சிறைப்பிடிப்பு
சாலையை சீரமைக்க வலியுறுத்தி அரசு பேருந்து சிறைப்பிடிப்பு
சாலையை சீரமைக்க வலியுறுத்தி அரசு பேருந்து சிறைப்பிடிப்பு
ADDED : செப் 02, 2025 12:49 AM
கும்மிடிப்பூண்டி, பொன்னேரி அருகே சகதியாக மாறிய சாலையை சீரமைக்க வலியுறுத்தி, மக்கள் அரசு பேருந்தை சிறை பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பொன்னேரியில் இருந்து ரெட்டிப்பாளையம் செல்லும் சாலை வழியே இரண்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பொன்னேரி அடுத்த சக்தி நகர் பகுதியில் சாலை முற்றிலுமாக சிதிலமடைந்து சகதியாக மாறியது. பல முறை நெடுஞ்சாலை துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
நெடுஞ்சாலை துறையின் அலட்சிய போக்கை கண்டித்து அவ்வழியே சென்ற அரசு பேருந்தை கிராம மக்கள் நேற்று சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம மக்கள் கூறியதாவது:
குவாரிகளிலிருந்து மண் ஏற்றி செல்லும் லாரிகளால் தங்களது கிராமங்களுக்கு செல்லும் சாலை முற்றிலுமாக சேதம் அடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
சிதிலமடைந்த சாலையால் பேருந்து சேவையும் அவ்வப்போது நிறுத்தப்படுகிறது. 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தக்கூடிய சாலை சீரமைக்காமல் நெடுஞ்சாலை துறை அலட்சியம் காட்டுகின்றனர்'.
இவ்வாறு கிராம மக்கள் கூறினர்.
தகவல் அறிந்து சென்ற போலீசார், கிராம மக்களை சமாதானம் செய்தனர். நெடுஞ்சாலை துறை அலுவலர்களிடம் பேசி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். சமாதானம் அடைந்த மக்கள், பேருந்தை விடுவித்து கலைந்து சென்றனர்.