/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பம் வினியோகம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பம் வினியோகம்
ADDED : மார் 21, 2024 12:14 AM
திருத்தணி:அரக்கோணம் லோக்சபா தொகுதிக்குட்பட்டது திருத்தணி சட்டசபை தொகுதி. இந்த தொகுதியில், 2,72,362 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 4,699 பேர் மாற்றுத்திறனாளிகள். 85 வயதுக்கு மேற்பட்டோர், 1,901 பேர் என, மொத்தம், 6,600 பேர் உள்ளனர்.
இவர்களுக்கு, நேற்று முதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தீபா தலைமையில், தாசில்தார் மதியழகன் வீடு, வீடாக சென்று தபால் ஓட்டுகள் வேண்டுமா அல்லது நேரில் வந்து ஓட்டு போடுகிறீர்களா என கேட்டறிந்து விண்ணப்பங்கள் வழங்கி வருகின்றனர்.
விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைப்பவர்களுக்கு அடுத்த மாதம் முதல் வாரத்திற்கு ஓட்டுச்சீட்டுகள் வழங்கப்படும் என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

