/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விளம்பரங்களை அழிப்பதில் பாரபட்சம்
/
விளம்பரங்களை அழிப்பதில் பாரபட்சம்
ADDED : மார் 19, 2024 07:16 AM

சென்னை: தமிழகத்தில் ஏப்., 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கிறது. சென்னையில் மத்திய, தெற்கு, வடக்கு என, மூன்று லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது முதல், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
இதையடுத்து, பிரதான கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், பேனர்கள், தட்டிகள், பொது இடங்களில் உள்ள கொடி கம்பங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. அதேபோல், பொது இடங்களில் முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்துடன் உள்ள அரசின் சாதனை விளம்பரங்களையும் அகற்றும் பணி தீவிரமாக நடக்கிறது.
இதில், அண்ணா நகர் மற்றும் வில்லிவாக்கம் பகுதியில், அரசின் சாதனை விளக்க விளம்பரங்களை அழிப்பதில், மாநகராட்சி பாரபட்சம் காட்டுகிறது.
குறிப்பாக அண்ணா நகர் இரண்டாவது அவென்யூவில் உள்ள மூன்று பேருந்து நிறுத்தங்கள், ஐ.சி.எப்., பேருந்து நிறுத்தம் மற்றும் வில்லிவாக்கம் எம்.டி.எச்., சாலையில் உள்ள பேருந்து நிறுத்தங்களில், அரசின் விளம்பரங்கள் அகற்றப்படாமல் உள்ளன.

