/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடம்பத்துாரில் ரூ.89 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்
/
கடம்பத்துாரில் ரூ.89 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்
ADDED : டிச 17, 2024 12:38 AM

கடம்பத்துார், டிச. 17-
கடம்பத்துார் ஒன்றிய அலுவலகத்தில், 25வது மற்றும் பதவியேற்று ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில், ஒன்றியக்குழு கடைசி கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில் பி.டி.ஓ.,க்கள் மணிசேகர், செல்வக்குமார், ஒன்றிய குழு துணைத் தலைவர் சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகிக்க, ஒன்றியக் குழு தலைவர் சுஜாதா தலைமை வகித்தார்.
கூட்டத்தில் முதலில் வரவு -- செலவினங்கள் வாசிக்கப்பட்டன. பின் ஊராட்சிப் பகுதிகளான அரசு நடுநிலைப் பள்ளிகளில் கழிப்பறை கட்டடம் மற்றும் வகுப்பறை கட்டடம், 2.95 லட்சம் ரூபாயில் சீரமைக்கப்பட்டது. 9.55 லட்சம் ரூபாயில், வயலுார் ஊராட்சி சூரகாபுரம் இருளர் காலனியில் கல்வெட்டு, கசவநல்லாத்துார் சுந்தரகணேசா நகரில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது.
பழுதடைந்த அங்கன்வாடி, ஊராட்சி, பள்ளி கட்டடங்கள், 3.76 லட்சம் ரூபாயில் இடித்து அகற்றப்பட்டன. தலா, 14 லட்சம் ரூபாய் மதிப்பில் கீழ்நல்லாத்துார், பிஞ்சிவாக்கம் பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டது.
தலா, 22.65 லட்சம் ரூபாய் மதிப்பில் கொண்டஞ்சேரி, வெங்கத்துார் பகுதியில் ஊராட்சி கட்டடம் கட்டப்பட்டது என, மொத்தம், 89 லட்சத்து 56,000 ரூபாய் ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

