/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தண்டவாளத்தில் சிக்கிய லாரி ரயில் போக்குவரத்து பாதிப்பு
/
தண்டவாளத்தில் சிக்கிய லாரி ரயில் போக்குவரத்து பாதிப்பு
தண்டவாளத்தில் சிக்கிய லாரி ரயில் போக்குவரத்து பாதிப்பு
தண்டவாளத்தில் சிக்கிய லாரி ரயில் போக்குவரத்து பாதிப்பு
ADDED : மார் 06, 2024 12:33 AM

திருவள்ளூர், சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில், திருநின்றவூர் - வேப்பம்பட்டு இடையே கடவுப்பாதை 13 அமைந்துள்ளது.
நேற்று காலை 9:25 மணிக்கு திருநின்றவூர் நோக்கி சென்ற லாரி, கடவுப்பாதையை கடந்து செல்லும்போது விரைவு ரயில் செல்லும் தண்டவாளத்தில் சிக்கியது.
இதுகுறித்து தகவல் கிடைத்து, திருப்பதியிலிருந்து சென்னை நோக்கி வந்த கருடாத்திரி விரைவு ரயில் மற்றும் புறநகர் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டன.
ரயில்வே ஊழியர்கள் மற்றும் அப்பகுதிவாசிகள் ஒன்றிணைந்து, தண்டவாளத்தில் சிக்கிய லாரியை அப்புறப்படுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
லாரி கடவுப்பாதையை கடந்து சென்ற பின், காலை 9:50 மணிக்கு ரயில் போக்குவரத்து சீரானது.
இதனால் அப்பகுதியில் அரைமணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவள்ளூர் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.