/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண பொன்னேரியில் ஆலோசனை கூட்டம்
/
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண பொன்னேரியில் ஆலோசனை கூட்டம்
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண பொன்னேரியில் ஆலோசனை கூட்டம்
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண பொன்னேரியில் ஆலோசனை கூட்டம்
ADDED : டிச 19, 2025 06:25 AM
பொன்னேரி: பொன்னேரியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பது தொடர்பாக காவல் துறை அதிகாரிகள், பொதுமக்கள், வியாபாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.
பொன்னேரி அரிஅரன் பஜார் சாலை மற்றும் புதிய பேருந்து நிலைய சாலையில், 500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. சாலையின் ஒரு பகுதியில் வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர். மேலும், விளம்பர பலகைகள் வைக்கப்படுகின்றன.
சாலையோர சிறு வியாபாரிகளும், இரண்டு மூன்று வரிசைகளில் பொருட்களை வைத்து சாலையை ஆக்கிரமிக்கின்றனர்.
இதனால், இரு சாலைகள் மற்றும் தேரடி சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கடும் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட மக்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில், ஆவடி கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டது.
ஆவடி கமிஷனர் சங்கர் உத்தரவுப்படி, நேற்று பொன்னேரி உதவி கமிஷனர் சங்கர், போக்குவரத்து உதவி கமிஷனர் கனகராஜ் ஆகியோர் தலைமையில், வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள், குடியிருப்போர் சங்கங்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.
பொன்னேரி நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து விரைவாக சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.
தொடர்ந்து, காவல் துறை அதிகாரிகள், வியாபாரிகள், அரிஅரன் பஜார் வீதி, தேரடி ஆகிய பகுதிகளில் களஆய்வு மேற்கொண்டனர்.
விரைவில், சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படுத்தப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

