/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டிப்பர், கரும்பு லாரிகளால் பள்ளிப்பட்டில் நெரிசல்
/
டிப்பர், கரும்பு லாரிகளால் பள்ளிப்பட்டில் நெரிசல்
டிப்பர், கரும்பு லாரிகளால் பள்ளிப்பட்டில் நெரிசல்
டிப்பர், கரும்பு லாரிகளால் பள்ளிப்பட்டில் நெரிசல்
ADDED : நவ 27, 2025 03:21 AM

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு வழியாக செல்லும் டிப்பர் லாரிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், பள்ளி மாணவ - மாணவியர் மற்றும் அப்பகுதி மக்கள் அவதிப் பட்டு வருகின்றனர்.
பள்ளிப்பட்டை ஒட்டியுள்ள பகுதியில், கல் மற்றும் மண் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த குவாரிகளுக்கு திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலுார், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான டிப்பர் லாரிகள் சென்று வருகின்றன.
பள்ளிப்பட்டு வழியாக டிப்பர் லாரிகள் இயக்கப் படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குறிப்பாக, காலை - மாலை நேரத்தில் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர்.
மேலும், பள்ளிப்பட்டு அருகே ஆந்திர மாநில எல்லையில் செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலைக்கு ஏராளமான கரும்பு லாரிகள், பள்ளிப்பட்டு வழியாக இயக்கப் படுகின்றன.
பள்ளிப்பட்டு காந்தி சாலை குறுகியதாக உள்ளது.
இச்சாலையில் சென்று வரும் டிப்பர் மற்றும் கரும்பு லாரிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
அச்சமயங்களில், இருசக்கரம் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் பல மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதை தவிர்க்க, காலை - மாலை நேரத்தில் கனரக வாகனங்கள், பள்ளிப்பட்டு நகருக்குள் நுழைய போலீசார் தடை விதிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

