/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கார் - பைக் மோதல் வாலிபர் ' சீரியஸ் '
/
கார் - பைக் மோதல் வாலிபர் ' சீரியஸ் '
ADDED : நவ 04, 2025 08:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு: கனகம்மாசத்திரம் அருகே கார் மீது பைக் மோதிய விபத்தில், வாலிபர் படுகாயம் அடைந்தார்.
திருவாலங்காடு ஒன்றியம் கூளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த், 27; தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு கனகம்மாசத்திரம் பஜாருக்கு, 'ஹீரோ பேஷன் புரோ' பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
கூளூர் பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது, சாலையோரம் நின்ற கார் மீது பைக் மோதியது. இதில், படுகாயமடைந்த பிரசாந்தை மீட்ட வாகன ஓட்டிகள், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிந்த கனகம்மாசத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

