/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போலியாக வழங்கப்பட்ட பழங்குடியினர் சான்றிதழ் ரத்து
/
போலியாக வழங்கப்பட்ட பழங்குடியினர் சான்றிதழ் ரத்து
ADDED : நவ 07, 2024 10:19 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் போலியாக பெறப்பட்ட 296 பழங்குடியினர் சான்றிதழை கலெக்டர் அதிரடியாக ரத்து செய்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, திருத்தணி தாலுகாவில் 11 கிராமங்களில், 296 பேர் போலியாக பழங்குடியினர் சான்றிதழ் பெற்றனர்.
இதுகுறித்து, தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பிற்கு தெரிய வந்தது. இதையடுத்து, அந்த சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு செய்து, கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதன்படி 11 கிராமங்களில் பெறப்பட்ட, 296 போலி பழங்குடியின சான்றிதழ்களை கலெக்டர் பிரபுசங்கர் ரத்து செய்துள்ளார்.

