/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவொற்றியூரில் வீடு புகுந்து திருட்டு
/
திருவொற்றியூரில் வீடு புகுந்து திருட்டு
ADDED : அக் 28, 2025 10:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர்: திருவொற்றியூர், பலகை தொட்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 45. இவரது மனைவி அஸ்வினி 42. செந்தில்குமார் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார்.
கடந்த 17ம் தேதி அஸ்வினி தன் குழந்தைகளுடன், சிங்கப்பூருக்கு 10 நாள் சுற்றுலா சென்றார். நேற்று வீடு திரும்பினார்.
அப்போது, வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள், 30,000 ரூபாய், அரை கிலோ வெள்ளி பொருள்கள் திருடிச் சென்றது தெரிந்தது. இது குறித்து திருவொற்றியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

