ADDED : பிப் 13, 2024 08:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தை பிரம்மோற்வம் கடந்த, 4ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
10 நாட்கள் நடைபெற்ற விழாவில், உற்சவர் வீரராகவர், தினமும் காலை, மாலை இரு வேளையிலும், பூதேவி, ஸ்ரீதேவி சமேதராக பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து, அருள்பாலித்தார். நிறைவு நாளான நேற்று முன்தினம், த்வாதச ஆராதனம், வெட்டிவேர் சப்பரம் நடந்தது. இரவு 10:00 மணிக்கு, கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவடைந்தது.

