/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பேக்கரி கடை ஊழியரை தாக்கி கொலை மிரட்டல்
/
பேக்கரி கடை ஊழியரை தாக்கி கொலை மிரட்டல்
ADDED : மார் 15, 2024 08:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:கடம்பத்துார் ஒன்றியம், கீழ்நல்லாத்துாரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 63. இவர் மணவாளநகர் பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த 13ம் தேதி இரவு வந்த மூன்று நபர்கள் பிறந்த நாள் கேக் வாங்கியுள்ளனர்.
பணம் கேட்டதற்கு நாங்கள் யார் தெரியுமா என ஆபாசமாக பேசி, கடையில் பணிபுரியும் ஸ்ரீநாத் என்பவரை கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.
இதுகுறித்து நேற்று முன்தினம் வெங்கடேசன் கொடுத்த புகார்படி மணவாளநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

