/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையோரத்தில் கழிவுநீர் கொட்டுவதால் துர்நாற்றம்
/
சாலையோரத்தில் கழிவுநீர் கொட்டுவதால் துர்நாற்றம்
ADDED : அக் 24, 2025 12:31 AM

பொன்னேரி: குடியிருப்புகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுநீர் சாலையோரங்களில் கொட்டப்பட்டு, துர்நாற்றம் வீசுவதால், வாகன ஓட்டிகள் சிரமத்துடன் பயணிக்கின்றனர்.
பொன்னேரி - பழவேற்காடு மாநில நெடுஞ்சாலையின் ஓரங்களில், விவசாய நிலங்களும், சதுப்பு நிலப்பகுதிகளும் அதிக அளவில் உள்ளன.
இந்த பகுதிகளில், தனிநபர்கள் சிலர், வீடுகளில் சேகரிக்கும் கழிவுநீரை, டிராக்டர்களில் கொண்டு வந்து கொட்டுகின்றனர்.
அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதால், இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.கழிவுநீர் கொட்டப்படுவதால், நீர்நிலைகளும் மாசடைந்து விவசாய நிலங்களும் பாதிப்பிற்கு உள்ளாகின்ற ன.
சாலையோரங்களில் கழிவுநீர் கொட்டப்படுவதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

