/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பின்றி அரியன்வாயல் பூங்கா
/
பராமரிப்பின்றி அரியன்வாயல் பூங்கா
ADDED : டிச 30, 2024 01:35 AM

மீஞ்சூர்,:மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அரியன்வாயல் பகுதியில் சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா பராமரிப்பு இன்றி கிடக்கிறது. பூங்கா முழுதும் புற்கள், செடிகள் வளர்ந்து உள்ளது. சிறுவர்கள் விளையாடுவதற்கு பொருத்தப்பட்டுள்ள சறுக்குமரம், ராட்டினம் உள்ளிட்டவைகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி உள்ளது.
இதனால், சிறுவர்கள் அங்கு விளையாடவும், முதியவர்கள் காலை, மாலை நேரங்களில் அங்கு நடைபயிற்சி மேற்கொள்ளவும் முடியாத நிலை உள்ளது.
பராமரிப்பு இன்றி இருக்கும் பூங்காவிற்கு யாரும் வராத நிலையில், அங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து வீணாகி வருகின்றன. பல லட்சம் ரூபாய் செலவிட்டு, விளையாட்டு பூங்கா அமைத்த பேரூராட்சி நிர்வாகம் அதை முறையாக பராமரிப்பதில்லை என, பகுதிவாசிகள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.

