/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மதுபாட்டில் கடத்தியவர் சிக்கினார்
/
மதுபாட்டில் கடத்தியவர் சிக்கினார்
ADDED : நவ 06, 2025 09:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு: ஆந்திர மதுபாட்டில்கள் கடத்தி வந்தவரை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
ஆந்திர மாநில மதுபாட்டில்கள், தமிழகத்திற்கு கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திருத்தணி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், கனகம்மாசத்திரம் கூட்டுச்சாலையில் சோதனையில் ஈடு பட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை சோதனை செய்ததில், 20 ஆந்திர மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், திருத்தணி டி.புதுாரை சேர்ந்த முத்து, 60, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

