ADDED : மார் 29, 2025 10:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி அடுத்த பொன்பாடி பகுதியில், திருத்தணி போலீசார் நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சந்தேகத்தின் பேரில், போலீசார் சோதனை செய்தனர். அப்போது, வாகனத்தில், 40 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், தாழவேடு பகுதியைச் சேர்ந்த பாஸ்கர், 45, என தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் பாஸ்கரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

