/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெசவாளர்கள் கூலி உயர்வு பிரச்னை 21 நாட்களுக்கு பின் முடிவுக்கு வந்தது
/
நெசவாளர்கள் கூலி உயர்வு பிரச்னை 21 நாட்களுக்கு பின் முடிவுக்கு வந்தது
நெசவாளர்கள் கூலி உயர்வு பிரச்னை 21 நாட்களுக்கு பின் முடிவுக்கு வந்தது
நெசவாளர்கள் கூலி உயர்வு பிரச்னை 21 நாட்களுக்கு பின் முடிவுக்கு வந்தது
ADDED : பிப் 27, 2024 10:09 PM

திருத்தணி:திருத்தணி வருவாய் கோட்டத்தில் மத்துார், புச்சிரெட்டிப்பள்ளி, பொதட்டூர்பேட்டை, அம்மையார்குப்பம், அத்திமாஞ்சேரிப்பேட்டை, வங்கனுார் மற்றும் ஆர்.கே.பேட்டை ஆகிய பகுதிகளில், 12,000த்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள், விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நெசவாளர்கள் கூலி உயர்த்த வேண்டும் என, 20 நாட்களுக்கு முன் வேலை நிறுத்தப் போராட்டத்தை துவக்கினர்.
இருமுறை சமரச கூட்டம் நடந்தது. ஆனால், இரண்டு முறையும் தோல்வியடைந்தது.
இந்நிலையில், நேற்று திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை, கோட்டாட்சியர் தீபா, டி.எஸ்.பி., விக்னேஷ் தமிழ்மாறன் ஆகியோர் தலைமையில் நடந்தது.
இதில் கம்பெனி உரிமையாளர்கள், விசைத்தறி நெசவாளர்கள் பங்கேற்றனர். இதில், 1 மீட்டர் துணிக்கு, மூன்று ரூபாய் வீதம் கூலி உயர்த்தி தர வேண்டுமென கோட்டாட்சியர், உரிமையாளர்களிடம் கூறினார்.
இதற்கு உரிமையாளர்கள், நெசவாளர்கள் சம்மதம் தெரிவிக்கவே, 21 நாட்களுக்கு பின் கூலி உயர்வு பிரச்னை முடிவுக்கு வந்தது.
மேலும் இரு தரப்பினரும் இடையே புதிய ஒப்பந்தம் செய்யப்பட்டு, கையெழுத்து பெறப்பட்டது.
மேலும், இந்த கூட்டத்தில் தாசில்தார்கள், தொழிலாளர் நலவாரிய அலுவலர்கள் பங்கேற்றனர்.

