/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குழந்தை கடத்தல் ஆசாமி என நினைத்து வட மாநில வாலிபருக்கு அடி உதை
/
குழந்தை கடத்தல் ஆசாமி என நினைத்து வட மாநில வாலிபருக்கு அடி உதை
குழந்தை கடத்தல் ஆசாமி என நினைத்து வட மாநில வாலிபருக்கு அடி உதை
குழந்தை கடத்தல் ஆசாமி என நினைத்து வட மாநில வாலிபருக்கு அடி உதை
ADDED : பிப் 19, 2024 11:02 PM

திருவொற்றியூர்,:சென்னை, திருவொற்றியூர், ராமநாதபுரம் விளையாட்டு மைதானம் அருகே, வாலிபர்கள் சிலர் நேற்று முன்தினம் இரவு விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்பகுதியில், சாலையோரம் கிடந்த பிளாஸ்டிக், பேப்பர் குப்பை கழிவுகளை, வடமாநில வாலிபர் ஒருவர் சேகரித்துக் கொண்டிருந்தார். சமீபமாக 'குழந்தை கடத்தல் தொடர்பாக போலி ஆடியோ' சமூக வலைதளங்களில் வதந்தியை பரப்பி வருகிறது. இதன் தாக்கத்தால், வடமாநில வாலிபரிடம் அவர்கள் விசாரித்துள்ளனர்.
அவர், ஹிந்தியில் தன்னைப்பற்றி கூறியுள்ளார். மொழி புரியாத வாலிபர்கள், 'குழந்தை கடத்த வந்தாயா' எனக் கூறி, வீண் தகராறு செய்து, அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், அந்த வாலிபர் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர், எண்ணுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வடமாநில வாலிபரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரிடம் விசாரித்ததில், மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ், 36, என்பதும், சில மாதங்களுக்கு முன், வேலை தேடி சென்னை வந்ததும் தெரிய வந்தது.
வேலை ஏதும் கிடைக்காததால், குப்பை சேகரித்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.
இது குறித்து, எண்ணுார் உதவி கமிஷனர் வீரகுமார் கூறுகையில், ''காவல் துறை சார்பில், 'குழந்தை கடத்தல் ஆடியோ' போலியான தகவல் என, விளக்கம் அளிக்கப்பட்டு விட்டது. எனினும், அப்பாவி வடமாநில வாலிபர் தாக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடக்கிறது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது, வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

