/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கழிவுநீர் கால்வாயாக மாறிய நீர்வரத்து கால்வாய்
/
கழிவுநீர் கால்வாயாக மாறிய நீர்வரத்து கால்வாய்
ADDED : டிச 22, 2025 05:17 AM

மேல்நல்லாத்துார்: மேல்நல்லாத்துாரில் கூவம் ஆற்றுக்கு வரும் நீர்வரத்து கால்வாய் கழிவுநீர் கால்வாயாக மாறியுள்ளது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது மேல்நல்லாத்துார் ஊராட்சி. இங்குள்ள ஏரியிலிருந்து வெளியேறும் நீர் கூவம் ஆற்றுக்கு செல்லும் வகையில் நீர் வரத்து கால்வாய் உள்ளது.
அதிகத்துார் வழியாக கடம்பத்துார் செல்லும் ஒன்றிய சாலையில் பட்டறை பகுதியில் உள்ள நீர் வரத்து கால்வாய் போதிய பராமரிப்பில்லாததால் செடிகள் வளர்ந்து அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் கால்வாயாக மாறி விட்டது.
சம்பந்தப்பட்ட ஒன்றிய மற்றும் நீர்வளத்துறையினர் கண்டு கொள்ளாதது இப் பகுதி விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் ஊராட்சியில் ஆய்வு செய்து கழிவுநீர் கால்வாயாக மாறியுள்ள நீர்வரத்து கால்வாயை சீரமைக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

