/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி அருகே கார் மோதி சிறுமி பலி
/
திருத்தணி அருகே கார் மோதி சிறுமி பலி
ADDED : பிப் 19, 2024 06:30 AM

திருத்தணி: ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த், 35. இவர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகை பகுதியில் உள்ள தனியார் கிரானைட் கற்கள் தயாரிப்பு நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தன் குடும்பத்துடன் அங்கேயே தனி அறையில் தங்கியிருந்தார்.
நேற்று காலை ஸ்ரீகாந்த் மகள் ரித்திக்மாலிக், 10 என்பவர், வீட்டின் அருகே உள்ள திருத்தணி - சோளிங்கர் நெடுஞ்சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த கார் சிறுமியின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இதில் பலத்த காயமடைந்த சிறுமியை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், சிறுமி இறந்து விட்டார் என தெரிவித்தார்.
திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடி கார் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

