/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் பிளஸ் 1 தேர்வு தமிழில் 471 பேர் 'ஆப்சென்ட்'
/
திருவள்ளூரில் பிளஸ் 1 தேர்வு தமிழில் 471 பேர் 'ஆப்சென்ட்'
திருவள்ளூரில் பிளஸ் 1 தேர்வு தமிழில் 471 பேர் 'ஆப்சென்ட்'
திருவள்ளூரில் பிளஸ் 1 தேர்வு தமிழில் 471 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : மார் 05, 2024 06:42 AM

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று பிளஸ் 1 பொதுத்தேர்வு துவங்கியது. முதல் நாள் தேர்வில், 471 பேர் தேர்வு எழுதவில்லை.
திருவள்ளூர் மாவட்டத்தில், 2023- -24ம் கல்வியாண்டிற்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு, கடந்த, 1ம் தேதி துவங்கி, நடந்து வருகிறது. பிளஸ் 1 பொதுத்தேர்வு, நேற்று திருவள்ளூர் வருவாய் மாவட்டத்தில், 105 மையங்களில் நடந்தது.
இம்மையங்களில், தனித்தேர்வர் உள்பட, 29 ஆயிரத்து 375 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வினாத்தாள்கள், மொத்தம், 5 மையங்களில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களுக்கு, 24 மணி நேரமும் போலீசார் சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
தேர்வு அறையில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில், 80 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் நாள் நேற்று தமிழ் தேர்வில், 471 பேர் தேர்வு எழுத வரவில்லை.