/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பஸ் இன்ஜினில் திடீர் தீ 30 பயணியர் உயிர் தப்பினர்
/
அரசு பஸ் இன்ஜினில் திடீர் தீ 30 பயணியர் உயிர் தப்பினர்
அரசு பஸ் இன்ஜினில் திடீர் தீ 30 பயணியர் உயிர் தப்பினர்
அரசு பஸ் இன்ஜினில் திடீர் தீ 30 பயணியர் உயிர் தப்பினர்
ADDED : டிச 17, 2025 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி: திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து, தடம் எண்: 97இ என்ற அரசு பேருந்து, நேற்று மதியம் நல்லாட்டூரில் இருந்து திருத்தணி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.
பேருந்தில், 30க்கும் மேற்பட்ட பயணியர் இருந்தனர். திருத்தணி கமலா தியேட்டர் அருகே பேருந்து வந்த போது, திடீரென பேருந்து இன்ஜினில் புகை வந்து லேசாக தீப்பிடித்தது.
உடனே, ஓட்டுனர் சாதுரியமாக பேருந்தை சாலையோரம் நிறுத்தினார். பின், அனைத்து பயணியரும் பேருந்தில் இருந்து அவசரம், அவசரமாக இறங்கி ஓடினர்.
அதன்பின், அப்பகுதி மக்களின் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீ அணைக்கப்பட்டது.