/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
10.29 லட்சம் வேட்டி, சேலைகள் பொங்கல் பண்டிகைக்காக ஒதுக்கீடு
/
10.29 லட்சம் வேட்டி, சேலைகள் பொங்கல் பண்டிகைக்காக ஒதுக்கீடு
10.29 லட்சம் வேட்டி, சேலைகள் பொங்கல் பண்டிகைக்காக ஒதுக்கீடு
10.29 லட்சம் வேட்டி, சேலைகள் பொங்கல் பண்டிகைக்காக ஒதுக்கீடு
ADDED : டிச 24, 2025 05:57 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்காக, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 10.29 லட்சம் வேட்டி, சேலைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில், ஒன்பது வட்டங்களில், 1,108 ரேஷன் கடைகள் உள்ளன. அந்த கடைகளில், அந்தியோதனா அன்ன யோஜனா - 50,255, முன்னுரிமை குடும்ப அட்டை - 2,61,539 மற்றும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டை - 3,35,416 என, மொத்தம் 6,47,210 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு, மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில், மாதந்தோறும் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில், கோதுமை மற்றும் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும், பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன், இலவச, வேட்டி சேலை வழங்கி வருகிறது.
நடப்பாண்டில், 6,43,614 ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்க, மாவட்ட வழங்கல் துறையினர் கணக்கெடுப்பு நடத்தி, தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, மாவட்ட வழங்கல் துறையினர் சார்பில், முதல் கட்டமாக 80 சதவீதம் பேருக்கு வேட்டி, சேலை வழங்க வட்டம் வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன்படி, 5,13,957 வே ட்டிகள், 5,15,192 சேலைகள் என, மொத்தம் 10,29,149 வேட்டி, சேலைகள் வழங்க ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவை, பொங்கல் தினத்திற்குள் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு, தமிழக அரசின் உத்தரவு கிடைத்ததும், நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் அனுப்பி வைக்கப்படும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

