/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆர்.கே.பேட்டை ஆற்று தடுப்பு சுவர் பலப்படுத்தப்படுமா?
/
ஆர்.கே.பேட்டை ஆற்று தடுப்பு சுவர் பலப்படுத்தப்படுமா?
ஆர்.கே.பேட்டை ஆற்று தடுப்பு சுவர் பலப்படுத்தப்படுமா?
ஆர்.கே.பேட்டை ஆற்று தடுப்பு சுவர் பலப்படுத்தப்படுமா?
ADDED : மே 17, 2024 01:20 AM
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டையில் இருந்து ராஜாநகரம் வழியாக பள்ளிப்பட்டு செல்லும் சாலையில், ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே சாலை போக்குவரத்துக்காக பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்திற்கு தடுப்பு சுவர் இல்லை.
எச்சரிக்கை கற்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. இதனால், இந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் தவித்து வருகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்த வழியாக வந்த லாரி ஒன்று, பாலத்தில் இருந்து விலகி ஆற்றில் கவிழ்ந்தது. பாலத்திற்கு மேலாக வெள்ளம் பாயும் போது வடிந்து செல்வதற்கு ஏதுவாக இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்த மார்க்கத்தில் உள்ள சிறு பாலங்கள் எல்லாம், இடித்து விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாலத்தையும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

