/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சுற்றுலா பேருந்து மோதி இருவர் பலி
/
சுற்றுலா பேருந்து மோதி இருவர் பலி
ADDED : ஏப் 18, 2024 08:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அரசு மேல்நிலை பள்ளி எதிரே வடமாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பேருந்து சென்றது.
அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்த சோளிங்கரை சேர்ந்த மல்லிகா, 52, என்பவர் இறந்தார். இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த மல்லிகாவின் உறவினர் பாபு, 50, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இது குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

