/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தீர்த்தீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்
/
தீர்த்தீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்
தீர்த்தீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்
தீர்த்தீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED : ஏப் 03, 2024 01:15 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவள்ளூரில் பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவில் பங்குனி பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் விக்னேஸ்வரர் பூஜையுடன் துவங்கியது.
நேற்று காலை, கோவில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. பின், மூலவருக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மாலை சிம்ம வாஹனத்தில் திரிபுர சுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் திருவீதி உலா வந்து அருள்பாலித்தார்.
மூன்றாம் நாளான இன்று, காலை ஹம்சவாகனமும் இரவு சூரியபிரபையும் நடக்கிறது. பிரம்மோற்சவம் முன்னிட்டு, வரும் 12 வரை, தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீதி வலம் வருவார். 12 நாட்களும் காலை மாலை வேதபாராயணமும், 20ம் தேதி காலை 10:00 மணிக்கு, திருமுறை திருவிழாவும் நடைபெறுகிறது.