/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பணத்தை கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண்
/
பணத்தை கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண்
ADDED : ஏப் 04, 2024 08:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் தொழுதாவூர் ஊராட்சியை சேர்ந்தவர் முருகன், 42. இவர் கூலி வேலை செய்து வருகிறார். சின்னம்மாபேட்டை ரயில் நிலைய சாலையில் ஹோட்டல் நடத்தி வரும் வனஜா என்பவரிடம் ஏலச்சீட்டில் சேர்ந்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன் வனஜா 2 லட்சம் ரூபாயை முருகனிடம் கடனாக பெற்றுள்ளார். பணத்தை திருப்பி கேட்டபோது தராமல் இழுத்தடித்து வந்ததோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முருகன் அளித்த புகாரின்படி திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.

