/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
12 வயது மகளை கொன்று தம்பதி தற்கொலை கடன் தொல்லையால் விபரீத முடிவு
/
12 வயது மகளை கொன்று தம்பதி தற்கொலை கடன் தொல்லையால் விபரீத முடிவு
12 வயது மகளை கொன்று தம்பதி தற்கொலை கடன் தொல்லையால் விபரீத முடிவு
12 வயது மகளை கொன்று தம்பதி தற்கொலை கடன் தொல்லையால் விபரீத முடிவு
ADDED : மே 14, 2024 04:17 AM

சென்னை: மணலி, பெரியசேக்காடு, கிருஷ்ணப்பன் தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன், 40. இவர், மணலியில், காதி கிராப்ட் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி லோகேஸ்வரி, 35, மகள் காவியா, 12, எம்.கே.பி.நகர் தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்தார்.
நேற்று காலை ஜெகநாதனின் தாய் தணிகை வள்ளி, மகனுக்கு பலமுறை போன் செய்துள்ளார். அவர் எடுக்காததால், வீட்டின் உரிமையாளர் குமார் என்பவருக்கு போன் செய்து, கீழே சென்று தன் மகன் வீட்டில் இருக்கிறாரா என, பார்க்க சொல்லி உள்ளார்.
குமார் சென்று பார்த்தபோது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. பலமுறை அழைத்து பார்த்தும் பலன் இல்லை.
இதையடுத்து, ஜன்னல் வழியாக பார்த்தபோது, ஜெகநாதன், அவரது மனைவி லோகேஸ்வரி துாக்கில் தொங்கிய நிலையிலும், மகள் காவியா சோபாவில் படுத்துக் கொண்டிருப்பது போல் இருந்தது.
அதிர்ச்சியடைந்தவர், மாதவரம் பால்பண்ணை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இறந்து கிடந்த மூவரின் உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விசாரணையில் தெரிய வந்ததாவது:
ஜெகன்நாதன் 2020ம் ஆண்டு, மாதவரம், அருள் நகரில், 750 சதுர அடியில், 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீடு ஒன்றை வாங்கியுள்ளார். வீட்டின் கடனை அடைக்க முடியாததால், 2023ல், அந்த வீட்டை விற்றுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், மேலும் கடன் தொல்லை அதிகமாக இருந்ததாக தெரிகிறது. இதனால், விரக்தி அடைந்த ஜெகநாதன், 'கடன் தந்தவர்கள் என்னை மன்னித்து விடுங்கள்' எனக் கூறி, கடிதம் எழுதி வைத்துள்ளார்.
பின், 12 வயது மகளுக்கு, பாலில் துாக்க மாத்திரை கொடுத்து உறங்கிய பின், நைலான் கயிற்றில் துாக்கிட்டு இறக்க செய்தனர். இறந்த மகளின் உடலை சோபாவில் கிடத்தி விட்டு, தம்பதி துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

