/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளிப்பட்டில் செயல்படாத சிக்னல்
/
பள்ளிப்பட்டில் செயல்படாத சிக்னல்
ADDED : மே 25, 2024 01:20 AM

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு நகரில், 30 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். நகரின் பஜார் பகுதி வழியாக பேருந்து நிலையத்திற்கு சாலை வசதி உள்ளது.
குறுகலான இந்த சாலை வழியாக, ஆந்திர மாநில சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றி செல்லும் டிராக்டர்களும் செல்கின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக நகரி கூட்டு சாலையில் வாகனங்கள் சிக்கி தவிக்கின்றன.
இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், நகரி சாலையில், போக்குவரத்து சிக்னல் பொருத்தப்பட்டது. கரும்பு ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள், பகல் நேரத்தில், நகருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
பின், சிக்னல் செயல்பாடும் முடங்கியது. கரும்பு வாகனங்களுக்கும் தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. தற்போது பள்ளிப்பட்டு நகரில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
உள்ளூர்வாசிகள், பஜார் பகுதியில் இருசக்கர வாகனங்களில் பயணிக்கவும் சிக்கல் நிலவுகிறது. போக்குவரத்து சிக்னலை சரிசெய்து செயல்படுத்தவும், கரும்பு வாகனங்களுக்கு நகருக்குள் பகல் நேரத்தில் தடை விதிக்கவும் பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

