/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை அகற்றம்
/
அனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை அகற்றம்
ADDED : ஏப் 22, 2024 06:43 AM
கும்மிடிப்பூண்டி: ஆரணி அடுத்த சின்னம்பேடு கிராமத்தில், பெரிய காலனி பேருந்து நிறுத்தம் அருகே, அப்பகுதியை சேர்ந்த அமைப்பு சார்பில், 15 ஆண்டுகளுக்கு முன், சிமென்ட் கலவையாலான அம்பேத்கர் சிலை வைப்பதற்காக பீடம் ஒன்று நிறுவினர்.
அனுமதி கிடைக்க பெறாததால், அங்குள்ள அங்கன்வாடியில் சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில், அந்த சிலையை மர்ம நபர்கள், பீடத்தின் மீது வைத்தனர்.
நேற்று காலை பார்த்த அப்பகுதி மக்கள், போலீசாரிடம் தகவல் கொடுத்தனர்.
பொது இடத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலையை, ஆரணி போலீசார் அகற்றி வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர். சிலை வைத்தது யார் என்பது குறித்து ஆரணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

