/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நேரடி நெல் விதைப்பு பணியில் பொன்னேரி விவசாயிகள் ஆர்வம்
/
நேரடி நெல் விதைப்பு பணியில் பொன்னேரி விவசாயிகள் ஆர்வம்
நேரடி நெல் விதைப்பு பணியில் பொன்னேரி விவசாயிகள் ஆர்வம்
நேரடி நெல் விதைப்பு பணியில் பொன்னேரி விவசாயிகள் ஆர்வம்
ADDED : ஆக 19, 2024 11:25 PM

பொன்னேரி: மீஞ்சூர் வேளாண் வட்டத்திற்கு உட்பட்ட கோளூர், திருப்பாலைவனம், காட்டூர் ஆகிய குறுவட்டங்களில் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் உவர்ப்பாக இருக்கிறது.
இந்த கிராமங்களில், ஆண்டுக்கு ஒரு முறை மட்டும், வடகிழக்கு பருவமழை மற்றும் ஏரிகளில் தேங்கும் தண்ணீரை கொண்டு சம்பா பருவத்தின்போது நெல் பயிரிடப்படுகிறது.
நேரடி நெல் விதைப்பு முறையில், பயிரிடுவதை வழக்கமாக கொணடு உள்ளனர். இந்த ஆண்டு சம்பா பருவத்திற்காக, கடந்த மாதம், தரிசாக கிடந்த விளைநிலங்களை உழுது தயார் படுத்தினர்.
அவ்வப்போது மழை பெய்ததால் உழவு பணிகளும் எளிதாக மேற்கொண்டனர். ஆடி மாதம் முடியும் வரை காத்திருந்த விவசாயிகள், ஆவணி துவங்கிய நிலையில், கடந்த இரு தினங்களாக நேரடி நெல் விதைப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
உழுது வைத்திருந்த விளைநிலங்களில், பக்குவப்படுத்திய நெல் விதைகளை சீராக துாவி, அதன்மீது டிராக்டர்கள் உதவியுடன் மறுஉழவு செய்து, மண்ணுக்குள் விதைகளை புதையும்படி செய்யும் பணி நடைபெறுகிறது.
நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறியதாவது:
விதைக்கப்பட்ட நெல் விதைகள் பருவ மழை துவங்குவதற்கு முன் முளைத்து விடும். அதன் வேர்கள், பலத்த மழையை தாங்கும் தன்மையை பெறுவதால், விளைநிலங்களில் மழைநீர் தேங்கினாலும் பாதிப்பு இருக்காது.
நேரடி நெல் விதைப்பால், நடவுகூலி, மருந்து செலவினம், தண்ணீர் தேவை குறைகிறது. மேலும் அதிக துார்களுடன் நெற்பயிர்கள் வளர்வதால், கூடுதல் மகசூல் கிடைக்கிறது. இம்மாத இறுதிக்குள் அனைத்து கிராமங்களிலும் நேரடி நெல் விதைப்பு பணிகள் முடிந்துவிடும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

