/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பம்பரமாக சுற்றும் பறக்கும் படை திருத்தணியில் எதுவும் சிக்கவில்லை
/
பம்பரமாக சுற்றும் பறக்கும் படை திருத்தணியில் எதுவும் சிக்கவில்லை
பம்பரமாக சுற்றும் பறக்கும் படை திருத்தணியில் எதுவும் சிக்கவில்லை
பம்பரமாக சுற்றும் பறக்கும் படை திருத்தணியில் எதுவும் சிக்கவில்லை
ADDED : மார் 28, 2024 12:11 AM

திருத்தணி, அரக்கோணம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட திருத்தணி சட்டசபை தொகுதியில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தீபா தலைமையில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, 20ம் தேதி முதல் சோதனை பணிகளை நடத்தி வருகின்றனர்.
மூன்று பிரிவுகளாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமித்து, மூன்று ஷிப்டுகளாக சுழற்சி முறையில் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு குழுவிலும் துணை தாசில்தார் அந்தஸ்தில் உள்ள பிற துறை அலுவலர்கள், இரு போலீசார் மற்றும் வீடியோகிராபர் ஆகியோர் பணியில் இருப்பர்.
இந்நிலையில், எட்டு நாட்களாக பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் நடத்திய சோதனைகளில், இதுவரை பணம், தங்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் போன்றவை சிக்கவில்லை.
பிற இடங்களில், பறக்கும் படையினர் வாகன சோதனையில் தினசரி பணம், நகை மற்றும் பரிசுப் பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வரும் நிலையில், திருத்தணி சட்டசபை தொகுதியில் பறக்கும் படையினருக்கு இதுவரை எதுவுமே சிக்காதது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து திருத்தணி தொகுதி உதவி தேர்தல் அலுவலர் தீபா கூறியதாவது:
வரும் நாட்களில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் தீவிரமாக வாகனங்களை பரிசோதனை செய்து அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று முதல் சட்டசபை தொகுதி முழுதும், வருவாய் ஆய்வாளர்கள் மூலம் அனைத்து கிராமங்களிலும் வாக்காளர்களுக்கு, வரும் 19ம் தேதி நடைபெறும் தேர்தலில் கட்டாயம் ஓட்டளிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

