/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பறக்கும் படையினர் அதிரடி ரூ.25 லட்சம் பறிமுதல்
/
பறக்கும் படையினர் அதிரடி ரூ.25 லட்சம் பறிமுதல்
ADDED : ஏப் 06, 2024 12:58 AM

ஆர்.கே.பேட்டை:அரக்கோணம் லோக்சபா தேர்தல் ஒட்டி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், திருத்தணி ஆர்.டிஓ.,வுமான தீபா தலைமையில், திருத்தணி சட்டசபை தொகுதியில் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளன.
பள்ளிப்பட்டு ஒன்றியம், நெடுங்கல் பகுதியில், பறக்கும் படை அலுவலர் அவினா மற்றும் போலீசார் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, வாகனத்தில் வந்தவர் பையில், ஆவணம் இல்லாமல், 25 லட்சத்து, 90 ஆயிரம் ரூபாய் இருந்ததை பறிமுதல் செய்தனர். பணத்தை திருத்தணி ஆர்.டி.ஓ., தீபாவிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், பணம் கொண்டு வந்தவர், திருத்தணி ஒன்றியம் புச்சிரெட்டிப் பள்ளி சேர்ந்த சிரஞ்சீவி, 30 என்பவர் ஏ.டி.எம்., மையங்களில், பணம் நிரப்பும் பணியில் உள்ள விபரம் தெரிந்தது. 25.90 லட்சம் ரூபாய் எடுத்துக் கொண்டு பள்ளிப்பட்டு, பொதட்டூர் பேட்டை, அத்திமாஞ்சேரி பேட்டை மற்றும் நொச்சிலி ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் ஏ.டி.எம்., மையங்களில் பணம் நிரப்ப சென்ற போது ஆவணம் இல்லாமல் பிடிபட்டுள்ளார்.

