/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சொந்த ஊர் செல்லும் வடமாநிலத்தவர் ஓட்டளிக்க முடியாமல் ஏமாற்றம்
/
சொந்த ஊர் செல்லும் வடமாநிலத்தவர் ஓட்டளிக்க முடியாமல் ஏமாற்றம்
சொந்த ஊர் செல்லும் வடமாநிலத்தவர் ஓட்டளிக்க முடியாமல் ஏமாற்றம்
சொந்த ஊர் செல்லும் வடமாநிலத்தவர் ஓட்டளிக்க முடியாமல் ஏமாற்றம்
ADDED : ஏப் 04, 2024 09:56 PM
மறைமலை நகர்:காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில், செங்கல்பட்டு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட செங்கை புறநகர் பகுதிகளில், வட மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தங்கி, பல்வேறு வேலைகள் செய்து வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர், தங்களின் ஊர்களில் இருந்த தங்களின் ஓட்டு உரிமையை இங்கு மாற்றி வைத்துள்ளனர். இதனால், அவர்களின் சொந்த ஊரில், வாக்காளர் பட்டியலில் இருந்து தங்களின் பெயரை நீக்கி விட்டனர்.
தற்போது, இவர்கள் அனைவரும், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில், தங்களின் சொந்த மாநிலங்களுக்கு செல்வது வழக்கம்.
இந்த இரண்டு மாதங்களில், வட மாநிலங்களில் அதிக அளவில் திருமணங்கள் மற்றும் அக் ஷய திரிதியை வருவதால், அனைவரும் தங்களின் சொந்த ஊருக்கு செல்வர்.
இந்த ஆண்டும், அவர்கள் அனைவரும் சொந்த ஊர் செல்வதால், ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் ஓட்டு செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்த பகுதியில் இருந்து, முதற்கட்டமாக ஏப்ரல் 10ம் தேதி தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல, ரயில்களில் முன்பதிவு செய்து தயாராக உள்ளனர்.
இதனால், காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில், 100 சதவீதம் ஓட்டு என்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், வட மாநிலத்தைச் சேர்ந்த பலர், தேசிய கட்சியான பா.ஜ.,வின் ஆதரவாளர்களாக உள்ளனர்.
இந்த தொகுதி, தற்போது பா.ஜ., கூட்டணி கட்சியான பா.ம.க.,விற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

