/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சென்னை--- -- திருப்பதி நெடுஞ்சாலையில் விபத்தை தடுக்க தடுப்பு அமைப்பு

ADDED : ஆக 28, 2024 12:06 AM

திருத்தணி, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி காசிநாதபுரம் பகுதியில் திருப்பதி, திருத்தணி பழைய மற்றும் புதிய சென்னை சாலை, நாகாலபுரம் கூட்டுச்சாலை மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு இடங்களுக்கு செல்வதற்கு, மாநில நெடுஞ்சாலை உள்ளது.
இந்த பகுதியில் நான்கு முனையில் இருந்து வரும் வாகனங்கள் அடிக்கடி மோதி விபத்து நடந்து வருகிறது.
மேலும், அங்கு வேகத்தடை மற்றும் தானியங்கி சிக்னல் இல்லாததால், வாகன ஓட்டிகள் சாலையை கடக்கும் போது எதிர்பாராத விதமாக விபத்து நடந்து பலர் உயிரிழக்கின்றனர்.
இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., ஸ்ரீநிவாசபெருமாள் உத்தரவின்படி திருத்தணி போலீசார் கூட்டுச்சாலை அருகே தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் பேரிகார்டு - இரும்பு தடுப்பு வைத்தனர்.
இதனால் எதிர், எதிரே வரும் வாகனங்கள் அப்பகுதியில் நின்று, வாகனங்கள் சென்றபின் செல்வதால், விபத்துக்கள் நடப்பது குறைவாகும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.