ADDED : மே 16, 2024 09:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:வெங்கல் அருகே வாணியஞ்சத்திரம் கிராமத்தில் வசித்து வருபவர் நந்தகோபால், 68. இவரது மனைவி பிரபாவதி, 59, நேற்று காலை தன் வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவரிடம் தண்ணீர் தருமாறு கேட்டனர். பின் திடீரென பிரபாவதி கழுத்தில் இருந்த நாலரை சவரன் செயினை அறுத்து கொண்டு பைக்கில் சென்று விட்டனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பீதியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து நந்தகோபால் கொடுத்த புகாரின்படி வெங்கல் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

