/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பனை மரத்திற்கு 16 கிளைகள் ஆர்.கே.பேட்டையில் அதிசயம்
/
பனை மரத்திற்கு 16 கிளைகள் ஆர்.கே.பேட்டையில் அதிசயம்
பனை மரத்திற்கு 16 கிளைகள் ஆர்.கே.பேட்டையில் அதிசயம்
பனை மரத்திற்கு 16 கிளைகள் ஆர்.கே.பேட்டையில் அதிசயம்
ADDED : ஏப் 10, 2024 11:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டையில் இருந்து சித்துார் செல்லும் சாலையில், அஸ்வரேவந்தாபுரம் அடுத்துள்ளது கல்யாணபுரம் கிராமம்.
இந்த கிராமத்தை ஒட்டிய வயல்வெளியில் பனைமரம் ஒன்று உள்ளது. தரையில் இருந்து மூன்றாக வளர்ந்துள்ள இந்த மரத்தின் 20 அடி உயரத்தில், 16 கிளைகளுடன் பரந்து விரிந்துள்ளது.
இந்த பனை மரத்தின் விதைகள், மலேஷிய நாட்டில் இருந்து கொண்டு வந்து விதைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 60 ஆண்டுகளை கடந்து வளர்ந்துள்ள இந்த அதிசய பனை மரம். இதுவரை காய் காய்த்தது இல்லை.
இந்த அதிசய பனை மரத்தை அனைவரும் பார்த்து வியந்து செல்கின்றனர்.