/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
6 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை முயற்சி
/
6 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை முயற்சி
ADDED : டிச 29, 2025 03:30 AM
திருநெல்வேலி: தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே, 6 மாத பெண் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்து, தாயும் தற்கொலைக்கு முயன்றார்.
புளியங்குடி அருகே நெற்கட்டும்செவலை சேர்ந்தவர் ராஜ்குமார், ராணுவத்தில் பணி புரிகிறார். அரியூரைச் சேர்ந்த அனிதா, 25, என்பவருடன் திருமணமாகி, மகன், 6 மாத பெண் குழந்தை ஜெனிஷா ஸ்ரீயும் உள்ளனர்.
ராஜ்குமார் பணியில் உ ள்ளதால், அனிதா குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசிக்கிறார். டிச., 24ல் அனிதா தன் 6 மாத பெண் குழந்தையுடன், ஊருக்கு அருகிலுள்ள கிணற்றில் குதித்தார். அப்பகுதி மக்கள், உடனடியாக கிணற்றில் குதித்து, இருவரையும் மீட்டனர்.
அவர்களை சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். மேல் சிகிச்சைக்காக குழந்தை ஜெனிஷா ஸ்ரீ திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அந்த குழந்தை, இறந்தது. அனிதா சிகிச்சை பெற்று வருகிறார்.
பெற்றோர் வீட்டில் இருந்த அனிதா எதற்காக தற்கொலை செய்ய முயற்சித்தார் என்பது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

