/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
சிறுமிக்கு தொல்லை; முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை
/
சிறுமிக்கு தொல்லை; முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை
ADDED : செப் 16, 2025 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி; திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பொத்தையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் 68. இவர் மனவளர்ச்சி குன்றிய 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கை திருநெல்வேலி போக்சோ கோர்ட் விசாரித்தது. நீதிபதி சுரேஷ்குமார் குற்றம்சாட்டப்பட்ட பாலசுப்பிரமணியனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.