ADDED : டிச 19, 2025 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: சென்னையில் இருந்து கேரள மாநிலம் குருவாயூருக்கு சென்ற ரயிலில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையிலிருந்து நேற்று முன்தினம் இரவு குருவாயூர் சென்ற ரயில் திருநெல்வேலி வந்தபோது ரயில்வே போலீசார், பாதுகாப்புப் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
இன்ஜினுக்கு அடுத்த முன்பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்று இரண்டு பைகளில் இருந்த 18 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அங்கு நின்று கொண்டிருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் மண்டல் 40, மிட்டு மண்டல் 35, ரிட்டுகுமார் மண்டல் 36, ஆகியோரை கைது செய்தனர்.

