/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
/
மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : நவ 27, 2025 06:02 AM
தேனி: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச் சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் ஊக்குவிக்கும், முன்மாதிரியாக செயல்பட்ட கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருது வழங்கப்பட உள்ளது.
வளாகத்தில் பிளாஸ்டிக் இல்லாத நிறுவனங்கள், தலா 3 பள்ளிகள், கல்லுாரிகள், வணிக நிறுவனங்களுக்கு முதல் பரிசாக ரூ.10 லட்சம், 2ம் பரிசாக ரூ.5 லட்சம், 3ம் பரிசாக ரூ.3 லட்சம் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பத்தை கலெக்டர் அலுவலக இணையதள பக்கம் https://theni.nic.in பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்து 2026 ஜன.15க்குள் கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என, கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

