ADDED : ஏப் 10, 2025 06:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: அடிமாலி அருகே கல்லார் பீச்சாடு பகுதியில் ஏலத்தோட்டத்தில் ஆனவிலாசம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் ராகவன் 48, தொழிலாளியாக வேலை செய்தார்.
நேற்று முன்தினம் வேலை செய்து கொண்டிருந்தபோது பலத்த காற்று வீசியது.
அப்போது பலத்த சப்தத்துடன் மரக்கிளை முறிந்து விழுந்தது. அதனை பார்த்து தொழிலாளர்கள் சிதறி ஓடி உயிர் தப்பிய நிலையில் சதீஷ்ராகவன் மற்றும் அசாமைச் சேர்ந்த தொழிலாளி ஆகியோர் மீது மரக்கிளை விழுந்தது.
இருவரும் பலத்த காயம் அடைந்த சதீஷ்ராகவன் இறந்தார். அடிமாலி தாலுகா மருத்துவமனையில் அசாம் தொழிலாளி சிகிச்சை பெற்று வருகிறார். அடிமாலி போலீசார் விசாரிக்கின்றனர்.

