/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வாக்காளர் பட்டியலில் பதிவேற்றிய படிவங்கள் சரிபார்க்கும் பணி தீவிரம்

ADDED : டிச 12, 2025 06:23 AM
தேனி: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்காக ஆன்லைனில் பதிவேற்றப்பட்ட படிவங்களில் உள்ள தவறுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை சரி பார்த்து, திருத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாக்காளர்பட்டியில் சிறப்பு திருத்த பணிகள் நவ.,4ல் துவங்கியது. டிச., 4ல் முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் டிச., 11 வரை இப்பணிகள் நீட்டிக்கப்பட்டன. இந்நிலையில் டிச., 14 வரை மீண்டும் கால நீட்டிப்பு செய்யப் பட்டுள்ளது.
அதிகாரிகள் கூறுகையில், 'மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளிலும் எஸ்.ஐ.ஆர்., பணிக்காக வழங்கப்பட்ட படிவங்கள் நுாறு சதவீதம் திரும்ப பெறப்பட்டுள்ளன. அவற்றை பி.எல்.ஓ.,க்களுக்கான பிரத்யேக செயலியில் பதிவேற்றம் செய்து கணினி மயமாக்கப்பட்டுள்ளன.
பதிவேற்றம் செய்யும் போது சில படிவங்களில் ஆண், பெண், வயது, கணவர், தந்தை பெயர்கள் தவறாக பதிவேற்றியது கண்டறியப்பட்டுள்ளது. இந்த தவறுகளை சரி பார்த்து, திருத்தும் பணி நடக்கிறது. இப்பணியை விரைவில் முடிக்க அறிவுறுத்தி உள்ளனர்,' என்றனர்.