ADDED : ஜன 24, 2026 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: வீரபாண்டி அரசு கலை, அறிவியல் கல்லுாரியில் மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்புத்துறை, மகளிர் திட்டம் சார்பில் தனியார் துறைவேலைவாய்ப்பு முகாம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேலை நாடுநர்கள் பங்கேற்றனர்.
இதில் தனியார் நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்ட 277 பேருக்கு பணி பணி ஆணையை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் வழங்கினார். இது தவிர 89 பேர் திறன் பயிற்சி பெற தேர்வு செய்யப்பட்டனர்.
நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் சந்திரா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரமாபிரபா, கல்லுாரி முதல்வர் உமாதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

