/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வீரபாண்டி திருவிழாவிற்கு தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி தீவிரம்; பக்தர்களுக்கு வசதிகளை அதிகரிக்க கோரிக்கை

ADDED : ஏப் 27, 2025 07:01 AM

தேனி : வீரபாண்டி சித்திரை திருவிழாவிற்காக தற்காலிக பஸ் ஸ்டாண்ட், கடைகள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே 6 முதல் மே 13 வரை நடக்கிறது.
இதற்காக கம்பம் நடும் விழா ஏப். 16ல் நடந்தது. தினமும் ஏராளமான பக்தர்கள் கம்பத்திற்கு முல்லைப்பெரியாற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து ஊற்றி செல்கின்றனர்.
இது தவிர ஆயிரம் கண்பானை, அங்கப்பிரதட்சனம் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.
திருவிழா நாட்களில் பக்தர்கள் வசதிக்காக வீரபாண்டி-முத்துத்தேவன்பட்டி பைபாஸ் சந்திப்பு, வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே அண்ணாமலை நகரில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு வருகிறது.
தற்காலிகள் ரோட்டோர கடைகள், ராட்டினங்கள் அமைக்கும் பணி நடந்துவருகிறது.
அண்ணாமலை நகர்பகுதியில் அமைக்கப்படும் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அருகே பக்தர்களுக்கு கழிப்பிட வசதி, தண்ணீர் வசதி ஏற்படுத்தி தருவதில்லை.
பக்தர்கள் பலரும் இரவில் குடியிருப்பு பகுதிகளில் அசுத்தம் செய்வதால் குடியிருப்போர் அவதியடைந்தனர்.
அதனை தவிர்க்கும் விதமாக இந்தாண்டு போதிய நடமாடும் கழிப்பறை வசதி உடைய வாகனங்களை பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நிறுத்த வேண்டும், போதிய அளவில் மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி குடியிருப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.